Sunday, August 24, 2014

இருள் ஐந்து ,, அதனை நீக்கும் விளக்குகள் ஐந்து

அல்லாஹ்வின் திருபெயரால் ....................
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உலகப்பற்று என்பது ஓர் இருளாகும்,, [அதனை நீக்கும் ] ஒளிவிளக்கு இறையச்சம் என்னும் தக்வா ஆகும்.

பாவம் என்பது ஓர் இருளாம் ,, அதனைப் போக்கிவிடும் விளக்கு யாதெனில் பாவமிட்சியாகும் .


கப்ரு என்னும் மண்ணறையும் ஓர் இருளாம். அதனை நீக்கிவிடும் விளக்கு  'லாஇலாஹ இல்லல்லாஹ் ' என்னும் திருக்கலிமாவாகும் .

மறுமை நாள் என்பதும் ஓர் இருளாகும் ,, அதனை விலக்கிடும் ஒளிவிளக்கு நற்செயல்கலாம் .

சிராத்துல் முஸ்தகீம் எனும் பாலமும் ஓர் இருளாகும்,, அதனைப் போக்கிடும் விளக்கு இறைவனின் மீதுகொண்ட உறுதியாகும்.

ஒரு  இயலாத செயல் யாதெனின் , தனக்குத் தீங்கிழைத்தவனை மன்னித்தலாகும். ஏனென்றால் தனக்கு ஒருவன் தீங்கிழைத் திருப்பினும் பதிலுக்குத் தீங்கிழைக்க வலிமை பெற்றிருந்தும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுவது சிறந்தபண்பும் மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

நீ பிறருக்குச் செய்த உதவியை எவரிடத்திலும் சொல்லிக்காட்டாமல் இருப்பாயாக! மேலும், எந்நிலை யிலும் நேர்மையுடனும் நாணயமாகவும் இருந்திட அஞ்சக் கூடாது.

இத்ரீஸ் நபி [அலை] அவர்கள்  காலத்தில் ஓர் அரசர் இருந்தார். அவர் நுண்ணறிவு  பெற்றவராயும் , நேர்மையானவராயும், நீதி மிக்கவராயும் ,நற்குணங்கள் கொண்டவராயும் கொடை வள்ளல்லாயும் , அநீதியை எதிர்த்திடும் ஆற்றல் பெற்றவராயும் இருந்தார். அவர் தம் மைந்தனுக்கு கூறிய அறிவுரைகள் வருமாறு..

என் அன்புமகனே!

எனவே, நாம் அறிந்திட வேண்டிய செய்தி யாதெனின் நாம் துவக்கத்தில் எங்கிருந்து வந்தோம் எங்கு சென்று அடைவோம் என்பதனையேயாகும் . அதுபற்றி சிந்தனையை நாம் சிந்தையில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் மானிட இனத்தைப் படைத்தன் நோக்கம் யாதெனில் , அவன் தன் வல்லமையை வெளிபடுத்திடவும், ஏகத்துவத்தை நிலை நாட்டிடவுமேயாகும் .

ஆனால், நாம் ஆற்றவேண்டிய கடமை யாதெனின் , நம்மை அழகிய வடிவில் படைத்திட்ட இறைவனுக்கே நன்றி செலுத்துவதும், மறுமை வாழ்வில் நற்பேறு பெற்றிட அவனிடம்  இறைஞ்சுவதுமாகும்.

மேலும், இவ்வுலகில் நம் மன இச்சைப்படி நடக்காமல், என்றாவது ஒருநாள் நாம் இல்லாமை என்னும் அழிவில் ஆகிவிடுவோம்  என்பதனை உணர்ந்திட வேண்டும். அது பொழுதுதான் நம் எண்ணங்களை ஈடேற்றம் பெற்றிடும்.

உண்மைகளுக்கெல்லாம் மேலானது எதுவென்றால் ஒப்புயர் வற்ற தனி முதல்வனாகிய அல்லாஹ்வை அறிவதாகும்.

இந்த  'நப்ஸ் ' என்னும் சடத்துவ உடலுக்கு நாம் கொடுக்க வேண்டிய உணவு எதுவென்றால் நேர்வழி பெரும் நல்  அறிவுரைகலாகும் .

அறிவுடையோன் எவன் என்றால், தான் கற்றப்படி ஒழுகுபவனாவான் .
செல்வம் எதுவென்றால் இருப்பதைக்கொண்டு போதுமாக்கிக் கொள்வதாகும்.
கடைத்தேற வழி எதுவெனில் தனித்திருத்தலாகும்.
நட்பின் அடையாளம் என்துவேனில் பேராசையை எரித்து விடுவதாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.  

No comments:

Post a Comment