Wednesday, February 4, 2015

அறிவுக்கு சில துளிகள்

இஸ்லாமிய இளைஞனே !

கடுகி வரும் உலக மயம்
தொழிலை விற்றுக் காசாக்கும் தனிமயம்
பெட்டிக்குள்ளே அடங்குகின்ற கணினி மயம்
உலக வங்கி அடுக்குகளில் வட்டிமயம்
பருத்திக் காட்டில் நடமலட்டு விதை மயம்
சந்தை வேற்று நாட்டாரின் பொருள் மயம்
நூறு கோடி மடங்குகளில் கடன் வாங்கி நாடு கடன் மயம்

வான் மையம் கொண்டால் மழை
கடல் மையம் கொண்டால் புயல்
பூமி மையம் கொண்டால் பூகம்பம்
நீ மையம் கொண்டால்...?


சுதந்திரமாய் வாழலாம் - இனி
நம்மைப் பிடித்துப் போக
தூண்டில் வரை எதுவும் வராது.
உற்சாகமாய் நீந்துகின்றன.
தொட்டியில் அடைப்பட்ட மீன்கள்!
இன்று அந்த மீனின் நிலையில் தான் நீ!

உனக்கு மட்டும் தான் கோபம் வரும் என்பதில்லை.
காற்றுக்கு கோபம் வந்தால் சூறாவளி.
கடலுக்கு கோபம் வந்தால் கொந்தளிப்பு.
பூமிக்கு கோபம் வந்தால் பூகம்பம்.
வானுக்கு கோபம் வந்தால் பேய்மழை.

நீ உதவி கேட்டால் ஒருவரும் முன்வரமாட்டார்கள்.
நீ பசியோடு இருந்தால் கவளம் சோறும் கிடைக்காது.
நீ நோயுற்றால் விலகிவிடும் சுற்றம்.
நீ உயிர் விட்டுவிட்டாலோ ஊர் கூடி உன்னை விசாரிக்கும்
"இது தாண்டா உலகம்"

வாழ்க்கை என்பது விளையாட்டா ஆடிச் செல்ல?
நிழல் மரமா படுத்துத் தூங்கிப் போக?
போர்க்களமா அதைப் போரிடுவதற்கு?
காகிதமா அதைக் கிழித்துப் போட ?
திரைப் படமா கண்டு பொழுதைப் போக்க...?

வெற்றி உன்னிடம் இருந்தால் முயற்சியே முதலீடு
கல்வி சிறக்க ஆசிரியரின் ஊக்குவிப்பே முதலீடு.
உலகம் புதிதாய் பிறக்க இளைஞர்களே முதலீடு
வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற
முன்னோர்களின் வார்த்தைகளே முதலீடு.

இலட்சத்தில் ஒருவனாய் இராதே! இலட்சியப் பிறவியாய் இரு!
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்.
எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிவிடும்.
தவறி விழுந்தாலும் விதையாய் விழு! விருட்சமாய் எழலாம்.
தோல்வியைக் கண்டு சோம்பல் கொள்ளாதே! கீழே விழுவது மீண்டும் எழத்தான்!

பயன்படுத்தாத வீட்டை பயன்படுத்திக் கொள்ளும் ஓட்டடை!
என்பது நினைவிருக்கட்டும். வாழ்க்கை என்பது பேருந்து பயணமல்ல!
அதன் படிக்கட்டுப் பயணம்! நகரப் பேருந்தில் நங்கையர் இருக்கைப் பயணம்
போன்றது! எந்த நேரமும் பறி போகலாம்!

மழை இல்லாத போது குடையும் ஒரு சுமைதான்.
மணம் இல்லாத போது பூவும் ஒரு சுமைதான்.
சுவாசம் இல்லாத போது காற்றும் ஒரு சுமைதான்.
அன்பு இல்லாத போது உறவுகளும் ஒரு சுமைதான்.
கனவுகள் இல்லாத போது தூக்கமும் ஒரு சுமைதான்.
(மார்க்க) கல்வி இல்லாத போது வாழ்க்கையும் ஒரு சுமைதான்.

அரியணை மயக்கத்தில் அரசியல்வாதிகள்.
திரை மயக்கத்தில் இளைஞர்கள்.
பட்டிமன்ற விவாதங்களில் அறிஞர்கள்.
பசி மயக்கத்தில் நம் மக்கள்!

நடிகைகள் குலுங்குவதை நீ ரசிக்கிறாய்!
லாட்டரி பம்பர் குலுக்கலை நீ விரும்புகிறாய்!
பூமி மட்டும் குலுக்கினால் ஏன் மிரளுகிறாய்!
நடிகைகளின் தொப்புள் குழியை ரசிக்கிறாய்! ஆனால்
கப்ர் குழியைக் கண்டு ஏன் நடுங்குகிறாய்?

நீ ஒய்யாரமாய் நடக்கின்றாய்.
ஒரு நிமிடம் சிந்தித்தாயா?
உன் நிமிர்ந்த நடைக்கு உரம் போட்டது யார் என்று?
உயிர் கொடுத்தவருக்கு உயிர் பயம் கேடு கெட்ட மகனால்.
குழந்தைகள் சிறிய வயதில் பெற்றோருக்குத் தலைவலி
அவர்கள் பெரியதான போது பெற்றோருக்கு நெஞ்சு வலி.

கப்பல் செல்ல கடல் கேட்பதில்லை தட்சணை
வண்டுகள் அமர மலர் கேட்பதில்லை தட்சணை
பறவைகள் தங்க இலைகள் கேட்பதில்லை தட்சணை
நட்சத்திரங்கள் தவழ வானம் கேட்பதில்லை தட்சணை
விலங்குகள் தங்க காடுகள் கேட்பதில்லை தட்சணை
தனக்காக வாழ வரும் பெண்ணிடம் மட்டும் நீ கேட்கிறாயே வரதட்சணை ?

வாழ்ந்து பார் வாழ்க்கை ஒரு தேடல்
முயன்று பார் முன்னேற்றம் உன் கைப்பிடி
துணிந்து பார் வீரம் என்பது உன் விரல் நுனியளவு
சிந்தித்துப் பார் சவால்கள் என்பது உன் சகோதரன்
ஆராய்ந்து பார் அறிவியல் என்பது உனக்கு அடிமை
ஏறிப்பார் சிறுத்துப் போகும் சிகரங்கள்.

அட்டாலும் பாலாய், அரைத்தாலும் சந்தனமாய்
சுட்டாலும் சங்காய், கெட்டாலும் பிறருக்கு
ஊறு செய்யாமல் வாழ்ந்தால்
மட்டற்ற இன்பம் மல்கும் உன்வாழ்வில்...!

இரக்கமில்லா மனிதனுக்கு இதயமே சுமைதான்!
பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகுகளே சுமைதான்!
மணக்கத் தெரியாத மலர்களுக்கு மகரந்தமே சுமைதான்!
உதவத் தெரியாத நண்பருக்கு நட்புகூட சுமைதான்!
*********************************************************
உண்மையை நிலை நாட்டவும், கொடுமையை எதிர்க்கவும் துயரத்தை மாய்க்கவும் மட்டுமே குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

வார்த்தைகள் பூவைப் போன்றது. அதைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மதிப்பைப் பெறமுடியும்

பிறர் குறையை காண்பவன் அரை மனிதன் ஆவான். தன் குறையைக் காண்பவன் முழு மனிதன் ஆவான்.

துன்பங்கள் எப்போதும் நிரந்தரம் அல்ல. அவை பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல ஓடிவிடும்.

அன்பில் நம்பிக்கை வை. அது துயரத்தில் கொண்டுபோய் விட்டாலும் பரவாயில்லை. இதயத்தை மூடாதே.

யாருக்கு மனநோய் பற்றி அச்சம் இருக்கிறதோ அவர்களை அச்சமே ஒரு நோயாக பிடித்துக் கொள்கிறது.

நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து நாம் செய்யும் தர்மங்கள்தான்.

அதிகம் கற்கக் கற்க நம்முடைய அறியாமையை அதிகமாக அறிந்து கொள்கிறோம்.

இருள் இருள் என சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை தேட முயற்சி.

 குறைய வேண்டியது பாவம். நிறைய வேண்டியது புண்ணியம். தர்மமில்லாத சொத்தில் நலமில்லை.

அழிவு ஏற்படாமல் காக்கும் கருவியே அறிவு. அது பகைவரால் அழிக்க முடியாத உள் அரணும் ஆகும்.

மரணம் மன்னர்களின் அரண்மனையிலும் ஏழையின் குடிசையிலும் அழைக்காமலே சென்று கதவை தட்டும்.

உயர்ந்த பண்பாடு என்னும் சிறைக்குள் அடைபட்டு நேர்மை எனும் திட்டத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

உன்னிலும் தாழ்மையானவர்களிடம் பாசத்தையும், ஈகைக் குணத்தையும் கொண்டு அவர்களை அரவணை.

 துன்பத்தையும் துயரத்தையும் சகித்துக் கொள்வதைவிட வாழ்க்கையில் பெரிய அனுபவம் கிடையாது.

நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கு உலகத்திற்கு உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

 ஒழுக்கம் ஒரு போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் போராட வேண்டும்.

தன்னைத் தானே தாழ்த்தி கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் எவனுமில்லை.

 அச்சமில்லாதிருப்பது தைரியமில்லை. நீதிக்காகப் போராடும் உள்ள உறுதியே தைரியம் ஆகும்.

உண்மையான பெரிய மனிதனுக்கு அடையாளம் பணிவாக இருத்தல் என்று நான் நம்புகிறேன்.
*****************************************************************************
பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா ? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது.  இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். ( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை.  அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது,  பழகுவது,  வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு  ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்

குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.

10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன. அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

லைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.

நினைப்பதை அடைய   வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன.  ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.


தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:

எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது ? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன, சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும்,  வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.

படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம்.  வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.  குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.

வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று.  இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும்.  குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.

டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும்,  கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின் ) மழலைச் சொல் கேளாதார் ' என்கிறார் வள்ளுவர்.  வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள் !

ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார் !

பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள் !
இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும்.  அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது.
அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.
நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.
மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால்,  பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை.  சிந்தனை ஆற்றல் குறைகிறது.  செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது.  சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.
ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது.  இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும்.  அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. (ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பெற்றோர்களே! உஷார்!!

பெற்றோர்களே ! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள்.  சன் டிவியின் ' சுட்டி ' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை.  விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை.
பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள்.  தேனீர்,  சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான்.  உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.
கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.  நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா ?

குழந்தைகளின் எதிர்காலம் ?

இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?

உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி,  சிந்திக்கும் ஆற்றல் இன்றி,  செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல்,  மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும்,  அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும்,  உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


அலட்சியம் காட்டாதீர்!

இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.

எனவே ! பேற்றோர்களே ! குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள்.  அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள்.  கண்ட நேரங்களிலெல்லாம் டி. வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.
அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை.  இதுவே அவர்களுக்கு அழகு.
குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் நமது சமுதாயத்தை காத்தருள்வானாக!
*********************************************************************************
இவைகளை செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்

தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதில் விரைந்து கொள்ளுங்கள்

கைப் பொருள் கைவிட்டுப் போவதற்கு முன் தான தருமங்கள்
கொடுப்பதில் விரைந்து கொள்ளுங்கள் .

வயதும் [காலமும்] வீணாகும் முன் நன்மையான காரியங்களை
செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.

வயது வந்த பெண்மக்களை திருமணம் செய்து வைப்பதில்
விரைந்து கொள்ளுங்கள்.

மய்யித்தை அடக்கம் செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.

மரணம் வரும் முன்பு மறுமைக்குரிய நற்செயல் ஆற்றுவதில்
விரைந்து கொள்ளுங்கள்.

கைசேதம் [மன சஞ்சலம்] அடைவதற்கு முன் உங்களுக்கிடையே
ஏற்படும் சண்டை சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்வதில்
விரைந்து கொள்ளுங்கள்.

மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடிக் கொள்வதில்
விரைந்து கொள்ளுங்கள்.

செல்வம் இருக்கும்போதே கடமையான ஹஜ்ஜை [பயணத்தில்]
விரைந்து கொள்ளுங்கள்.

[பிறரிடம்] வாங்கிய கடனை திருப்பித் தருவதில்
விரைந்து கொள்ளுங்கள்.
அறிவுக்கு சில துளிகள் 

No comments:

Post a Comment