Saturday, November 8, 2014

ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று

ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று

அல்லாஹ்வின் திருபெயரால்.......

1.விடாமுயற்சி, 2.உண்மை, 3.நீதி.

ஹசன் பஸரீ [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்..

ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது .

பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காணமுடியாது.

பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது .

ஞானி இப்ராஹீம் நக்யீ [ரஹ் ] கூறுகின்றார்கள்..

முன் சென்றோர் அழிந்தொளிந்ததேல்லாம் மூன்று செயல்களின் காரணங்களாலேயாகும் .


அவையாவன..
1.மிகுதியான வீண் பேச்சுக்கள்
2.மிகுதியாக உண்ணுதல்
3.மிகுதியாகத் தூக்கம் .

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் [ரலி] அவர்கள் கூறுகின்றார்கள்..

இறைவன் கடமையாக்கியவைகளை நிறைவேற்று ,, நீ மனிதர்களில் சிறந்த வணக்கவாளியாக ஆகிவிடுவாய் ! இறைவன் விலக்கியவற்றைத் தவிர்த்துக் கொள் . நீ மனிதர்களில் பற்றற்றவனாக ஆகிவிடுவாய்! இறைவன் உனக்கு அளித்தவற்றை பொருந்திக்கொள் . நீ மனிதர்களில் தேவையற்றவனாக ஆகிவிடுவாய்!

ஓர் அறிஞர் கூறுகிறார்..

ஈமானின் அடையாளங்கள் நான்கு ..1. இறையச்சம் 2. நாணம் 3. நன்றி பாராட்டுதல் 4. பொறுமை .

உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..

இறைவணக்கத்தின் உண்மையான இன்பத்தை நான்கு விஷயங்களில் நான் கண்டுகொண்டேன் . அவையாவன.. 1. இறைவனின் கடமைகளை நிறைவேற்றுவதிலும்.2. இறைவன் தடுத்துள்ளவைகளை விட்டும் விலகியிருப்பதிலும் .3. இறைவனின் திருப்தியை நாடி நன்மையானவற்றை பிறருக்கு ஏவியதிலும் .4. இறைவனின் சினத்தை அஞ்சித் தீயவற்றைத் தடுத்தவற்றிலும் ஆகியவைகளில் ஆகும்.

இன்ஷாஅல்லாஹ்  இன்னும் மலரும்...........     

No comments:

Post a Comment