Saturday, April 20, 2024

My blog ✨️ list ✨️

 

Sunday, August 30, 2015

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் 

உங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்!

Wednesday, August 26, 2015

பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்.


பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்.. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்) வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.

பேரழிவுகளும் பாவமன்னிப்பும்


நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை -நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8 : 25)


பேரழிவுகள் ஏன்?

அல்லாஹ்வை புறக்கணித்து, அவன் வல்லமையை மறந்து, பல பாவங்களையும் புரியும் நன்றிகெட்ட மனிதர்கள் இப்பூமியில் வாழும்போது, இயற்கை சீற்றங்களான புயல், சூறைக்காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, எரிமழை தாக்குதல் போன்றவற்றால் அல்லாஹ்வின் கோபச் சோதனையை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு

தாய்மார்களே மார்க்கத்தை கற்க வெட்கப்படாதீர்கள் !


பெண்களில் சிறந்தவர்கள் அன்ஸாரி (மதீனாவாசிகளான) பெண்கள். அவர்கள் மார்க்கத்தை விளங்கிக்கொள்வதற்கு வெட்கப்பட்டதே கிடையாது” என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

​அன்றைய பெண்கள், மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அதை விளங்குவதற்கு முயற்சித்தார்கள். நாம் செய்யும் கடமைகளில் அமல்களில் ஏதும் தவறுகள் ஏற்பட்டுவிடுமோ எனப்பயந்து சொல்வதற்கு வெட்கப்படும் விடயங்களிலும் கூட மார்க்கம் என்ற ஒரே காரணத்தால் வெட்கத்தை ஒரு புறம் தள்ளி விட்டு மார்க்கச் சட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு முனைந்தார்கள். அன்ஸாரிய ஸஹாபிப் பெண்மணிகள் வாழ்க்கை வரலாற்றை தெளிவுபடுத்துவதற்கு இரு சம்பவங்களை முன் வைக்கின்றேன்.​

தற்பெருமை , ஆணவம் பற்றி இஸ்லாம் !



உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: -

இப்னு மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

”யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

கணவன் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறைகள் பற்றி குரான் சொல்லும் அறிவுரைகளும் பிரச்சனைகளின் தீர்வுகளும் !


வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.