Sunday, June 8, 2014

நீ தொழும்போது உன் உள்ளத்தைப் பெருமையை விட்டும் பேணிக்கொள்

நீ தொழும்போது உன் உள்ளத்தைப் பெருமையை விட்டும் பேணிக்கொள்  !

நீ மனிதர்களிடையே இருந்திடும்போது உன் நாவைப் பேணிக்கொள்!

உண்ணும்போது மிகுதியான உணவை உன் வாயில் திணிப்பதை விட்டும் உன் தொண்டையைப் பேணிக்கொள்!

பிறரின் வீட்டில் இருக்கும்போது உன் கண்களைப் பேணிக்கொள்!

நீ , எங்கிருந்தாலும் எத்தொழில் செய்திட்டாலும் அல்லாஹ்வைத் தியானம் செய்துகொள்!

எந்நேரமும் மரணத்தை மிகுதியாக நினைத்துக் கொள்!

நீ பிறருக்குச் செய்த உதவியையும், பிறர் உனக்குச் செய்து விட்ட தீங்கினையும் மறந்துவிடு!

உனக்குப் பிறர் செய்த உதவிக்கு நன்றி காட்டு!

உலகில் வாழ்வதை விரும்புவர்,, இறந்துபோவதை வெறுப்பர் .

செல்வத்தை விரும்புவர் ,, அது பற்றிய கேள்வி கணக்கை வெறுப்பர்.

உயர்ந்த மாளிகைகளைக் கட்டுவதனை விரும்புவர் ,, மண்ணறையை மறந்து விடுவர்.

உலகத்தை விரும்புவர்! மறுமையை மறந்து விடுவர்.

படைக்கப்பட்டவற்றை விரும்புவர் ,, படைத்தவனை மறந்துவிடுவர்.

சுவனம் என்னிடமுள்ளது,, ஆனால், வழிபாடு உன் மூலம் நிகழவேண்டும் .

தெய்வீக தன்மை என்னில் உண்டாகும் ,, அடிமைத் தனம் உன்னில் நிகழவேண்டும்.

துஆ என்னும் இறைஞ்சுதல் உன்னில் நிகழவேண்டும் ,, அதனை ஒப்புக்கொள்ளுதல் என்னில் நிகழும்.

ஓ ! என் அடியானே! சோதனை என் மூலம் நிகழும்,, அதனைப் பொறுத்துக் கொள்வது உன்னில் நிகழ வேண்டும்.

உணவு அழிப்பது என்னில் நிகழும்  ,, நன்றி செலுத்துதல் உன்னில் நிகழவேண்டும்.

மன்னிப்பு என்பது என்னில் நிகழும்,, மன்னிப்புத் தேடுவது உன் மூலம் நிகழவேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்
 லேபல் .. இஸ்லாம் கூறும் அறிவுரைகள்.
ஒரு சிறிய பல்லு குத்தும் குச்சியைக் கூட  நாம் அலட்ச்சியமாக எண்ணக் கூடாது, அதுவும் சில நேரங்களில் பயன் தரும்!

No comments:

Post a Comment